தமிழ்நாட்டில் உள்ள சங்கங்கள் தங்களுக்கு தேவையான கோரிக்கைகளை அரசிடம் முன்வைக்கும்போது, அவற்றை அரசு நிறைவேற்றாமல் இருந்தால் அதனை கண்டித்து போராட்டம் நடத்துவது வாடிக்கையாகவுள்ளது.
இயற்கையை பாதுகாக்க முன்வந்த திருமண மண்டப நலசங்கம் - marraige halls
சேலம் : மாநகரில் உள்ள திருமண மண்டபங்களில் இயற்கையை பாதுகாக்கும் வகையில் தீர்மானங்கள் நிறைவேற்றியுள்ளது பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
ஆனால் சற்று வித்தியாசமாக திருமண மண்ட நலசங்கம் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் இயற்கையை பாதுகாக்கும் வகையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
அதில், சங்கத்தின் செயல்பாடுகள் குறித்தும் எதிர்கால நலன் கருதி, நெகிழி பயன்பாட்டை அறவே ஒதுக்குதல், குடிநீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துதல், புதிய மழைநீர் சேமிப்புத் தொட்டிகள் உருவாக்குதல், மண்டபங்களை சுற்றியுள்ள பகுதிகளில் மரக்கன்றுகளை நடுதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இது பொதுமக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.