சேலம் மாநகராட்சி பகுதி முழுவதும் ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிப் பைகளை பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கை செய்து விழிப்புணர்வும் செய்யப்பட்டுவருகிறது. இதன் ஒருபகுதியாக சேலம் மாநகராட்சிப் பகுதியில் 100 இடங்களில் அட்டைப் பெட்டிகளில் வைத்து நெகிழிப் பைகள், கழிவுப் பொருள்களை சேகரிக்கும் நிகழ்ச்சி சேலம் குகையில் உள்ள மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.
நெகிழியை தவிர்ப்போம்: சேலம் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாணவர்கள் பங்கேற்பு - பிளாஸ்டிக் விழிப்புணர்வு நிகழ்ச்சி
சேலம்: நெகிழிப் பைகள் பயன்படுத்துவதை முற்றிலும் தடுக்க சேலத்தில் 100 இடங்களில் அட்டை பெட்டிகள் வைத்து நெகிழிப் பைகள் , கழிவுகள் சேகரிக்கும் பணி இன்று காலை தொடங்கியது.
இதனை சேலம் மாநகராட்சி ஆணையர் சதீஷ் தொடங்கிவைத்தார். பின்னர் அவர் மாணவிகளிடம் டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். இதற்கு நல்ல தண்ணீரை மூடிவைத்து கொசு உற்பத்தியாவதைத் தடுக்க முழு முயற்சி மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். பின்னர் நெகிழிப் பைகள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும் விளக்கினார்.
பிறகு அவர் அட்டை பெட்டிகளில் நெகிழிப் பைகளை மாணவிகள் போடும் நிகழ்ச்சியை தொடங்கிவைத்தார். இதில் திரளான மாணவிகள் பள்ளியில் சேகரித்து வைத்திருந்த நெகிழிப் பைகள், கழிவுப் பொருள்களை அட்டைப் பெட்டிகளில் வீசினர்.