தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தோட்ட வேலை செய்த சிறுமிகளிடம் பாலியல் வன்கொடுமை... ஒருவர் கைது - தோட்ட வேலை செய்த சிறுமிகள்

சேலம்: தோட்ட வேலைக்கு வந்த இரண்டு சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தது மட்டுமின்றி, அவர்களை மிரட்டியதாக சுக்கம்பட்டியைச் சேர்ந்த ரவீந்திரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

plantation owner  arrested in a sexual assault case
plantation owner arrested in a sexual assault case

By

Published : Nov 22, 2020, 2:08 PM IST

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்த மங்களபுரம் பகுதியைச் சேர்ந்த 13 மற்றும் 15 வயதுடைய இரண்டு சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சிறுமிகளின் உறவினர் சேகர் என்பவரை நாமகிரிப்பேட்டை காவல் துறையினர் கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சிறுமிகளிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், இவர்களை ஏற்கனவே சேலத்தைச் சேர்ந்த தோட்ட உரிமையாளர் ரவீந்திரன் என்பவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியது தெரியவந்துள்ளது.

வறுமை நிலை காரணமாக அண்டை மாவட்டமான சேலத்திற்கு தோட்ட வேலைக்குச் சென்றதாகவும், அங்கு விவசாய நிலங்களை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்துவரும் ரவீந்திரன் என்பவர் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் கூறினர்.

இதையடுத்து, சிறுமியின் குடும்பத்தினர் சேலம் மாவடட்ம் வீராணம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில், தோட்ட உரிமையாளர் ரவீந்திரனை அம்மாபேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தினர் கைது செய்தனர்.

விசாரணையில், கள்ளக்குறிச்சியை சேர்ந்த ரவீந்திரன், சேலம் மாவட்டம் சுக்கம்பட்டி பகுதிகளில் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் மற்றும் மாட்டு தீவன விற்பனை செய்து வருவது தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட ரவீந்திரன் மீது போக்சோ மற்றும் கொலை மிரட்டல் உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சமூகமே நோய்வாய் பட்டிருப்பதை காட்டும், குழந்தைகள் மீதான பாலியல் வக்கிரங்கள்!

ABOUT THE AUTHOR

...view details