மாற்றுத்திறனாளிகளின் குழந்தைகளும் சமுதாயத்தில் தனக்கென ஒரு பாதையை உருவாக்கி தங்களுடைய வாழ்வாதாரத்தை பாதுகாக்க உதவிடும் கல்வியினை எந்தவொரு தடையும் இல்லாமல் படிக்க வேண்டுமென்ற நோக்கில், தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆண்டுதோறும் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
மாற்றுத்திறனாளிகளின் குழந்தைகளை ஊக்குவிக்க உதவித்தொகை வழங்கும் விழா - scholarship
சேலம்: மாற்றுத்திறனாளிகளின் குழந்தைகளும் கல்வியில் உயர மாவட்ட மாற்றுத்திறனாளி சங்கம் சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.
கல்வி உதவித்தொகை
இதில் சேலம் சிவதாபுரம் பகுதியில் உள்ள சமுதாயக் கூட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சுப்ரமணி கலந்து கொண்டு 70-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகையை வழங்கினார்.