இது குறித்து இன்று சேலத்தில் பெரியார் பல்கலைக்கழகத் தொழிலாளர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் சக்திவேல் செய்தியாளர்களிடம் பேசுகையில்," பெரியார் பல்கலைக்கழகத்தில் தற்போது பதவியில் உள்ள துணைவேந்தர் குழந்தைவேலு உதவியுடன் பல்வேறு முறைகேடுகள், ஊழல்கள் தொடர்ந்து நடக்கின்றன. இது தொடர்பாக பலமுறை துணைவேந்தர் உள்ளிட்ட நிர்வாகத்தினரிடம் புகார் கூறியும் பலனில்லை. அதேபோல பல்கலைக்கழகத்தில் பணியாற்றிவரும் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்காமல் 22 நாட்கள் கணக்கீட்டில் சம்பளம் வழங்கப்படுகிறது.
ஒன்பதாண்டு காலத்திற்கு மேலாக பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தற்காலிக பணியாளர்களை இதுவரை பணி நிரந்தரம் செய்யவில்லை. இதனால் எங்களது 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை பல்கலைக்கழக வளாகத்தில் கோரிக்கை அட்டை அணிந்து தொழிலாளர்கள் பணியாற்றுவார்கள், அதற்கு அடுத்த நாள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றுவார்கள்.