தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெரியார் பல்கலைக்கழக  மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த உதவிப் பேராசிரியர் சரண் - உதவி பேராசிரியர் நீதிமன்றத்தில் சரண்

பெரியார் பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தேடப்பட்டு வந்த உதவி பேராசிரியர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

மாணவிக்கு பாலியல் தொல்லை
மாணவிக்கு பாலியல் தொல்லை

By

Published : Apr 23, 2022, 7:57 PM IST

பெரியார் பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த உதவிப் பேராசிரியர் சரண்

சேலம்: பெரியார் பல்கலைக்கழகத்தில் படிந்துவரும் புதுக்கோட்டையைச் சேர்ந்த மாணவி ஒருவர் சூரமங்கலம் காவல் நிலையத்தில் கடந்த மாதம் புகார் ஒன்றை அளித்தார்.

அந்த புகாரில், பெரியார் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராகப் பணியாற்றி வரும் கி. பிரேம்குமார் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்து, சாதி பெயரை சொல்லி மிரட்டல் விடுத்தாக குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக, சூரமங்கலம் மகளிர் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். அந்த உதவி பேராசிரியர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே அவர் தலைமறாவானார். இந்த நிலையில் நேற்று (ஏப்.22) பிரேம்குமார் சேலம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் சரணடைந்தார். இதைத் தொடர்ந்து அவர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையும் படிங்க:முன்னாள காதலியுடன் தகராறு - 2 பேருக்கு அரிவாள் வெட்டு - 3 பேர் கைது

ABOUT THE AUTHOR

...view details