தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'பெரியார் ஒரு தர்ம விரோதி'- மன்னார்குடி ராமானுஜ ஜீயர் - Periyar Dharma enemy

சேலம்: துக்ளக் விழாவில் பெரியார் குறித்து ரஜினி பேசியதில் எந்தத் தவறும் இல்லை என்றும் பெரியார் ஒரு தர்ம விரோதி எனவும் மன்னார்குடி ராமானுஜ ஜீயர் தெரிவித்துள்ளார்.

மன்னார்குடி ராமானுஜ ஜீயர்
மன்னார்குடி ராமானுஜ ஜீயர்

By

Published : Jan 23, 2020, 3:23 PM IST

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, தனியார் அமைப்பு சார்பில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 123ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சேலத்தில் அவரது திருவுருவச் சிலையை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அமைதிப் பேரணி நடைபெற்றது.

இந்த அமைதிப் பேரணியை மன்னார்குடி ராமானுஜ ஜீயர் கலந்துகொண்டு தொடங்கி வைத்தார். அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், 'தஞ்சை பெரிய கோயிலில் ஆகம விதிப்படி தமிழில் குடமுழுக்கு நடத்துவதில் தவறில்லை. தமிழர்களின் தாய்மொழி தமிழ் என்பதால் தமிழில் நடத்தலாம்' எனத் தெரிவித்தார்.

மன்னார்குடி ராமானுஜ ஜீயர்

மேலும் 'துக்ளக் விழாவில் பெரியார் குறித்து ரஜினி பேசியதில் எந்தத் தவறும் இல்லை. பெரியார் ஒரு தர்ம விரோதி' எனவும் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details