சேலம்:சேலம்மாவட்டத்திற்கு பேரறிவாளன் மற்றும் அவரது தாயார் அற்புதம்மாள் இருவரும் நேற்று (மே 20) வருகை தந்தனர். அப்போது மேட்டூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள பெரியார் படிப்பகத்தில் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணியை சந்தித்தனர். இதையடுத்து, சேலம் தனியார் ஹோட்டலில் பேரறிவாளனும், அவரது தாயாரும் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
இந்த சந்திப்பின்போது உடன் திரைப்பட இயக்குநர் மாரி செல்வராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர். இதைத்தொடர்ந்து அற்புதம்மாள் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், "சாமானியர்களின் குரல் எடுபடாது என்ற நிலையில், 31 ஆண்டுகளுக்குப் பிறகுதான் தன் மகனுக்கு விடுதலை கிடைத்துள்ளது. இனி சுதந்திர மனிதனாய் அவர் வலம் வருவார். சட்டப்படி நாங்கள் போராடினோம். நிறைய பேர் சிறையில் வாடுகின்றனர், அவர்களுக்கும் இந்த தீர்ப்பு பயனுள்ளதாக அமையும்.