தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சேலத்தில் நடந்த மக்கள் நீதிமன்றம் - 500 மனுக்களின் மீது நீதிபதிகள் விசாரணை! - மக்கள் நீதிமன்றம்

சேலம்: அஸ்தம்பட்டி அருகில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதில், 500 மனுக்களின் மீது நீதிபதிகள் விசாரணை நடத்தி, தீர்வு கண்டனர்.

மக்கள் நீதிமன்றம்
மக்கள் நீதிமன்றம்

By

Published : Feb 9, 2020, 5:19 PM IST

சேலம் அஸ்தம்பட்டி அருகில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மக்கள் நீதிமன்றம் கூடியது. மாவட்ட கூடுதல் நீதிபதி ஆபிரகாம் லிங்கன் தலைமை வகித்து மக்கள் நீதிமன்றத்தைத் தொடங்கி வைத்தார்.

பின்னர், பேசிய அவர், ' மக்கள் நீதிமன்றம் மூலம் பல்வேறு வழக்குகள் உடனுக்குடன் தீர்வு காணப்படுகிறது. இதுபோன்ற மக்கள் நீதி மன்றங்களை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

நடந்த இந்த மக்கள் நீதிமன்றத்தில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட மனுக்கள் எடுத்துக்கொள்ளப்பட்டு, தீர்வு காணப்பட்டு வருகிறது. இதில் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த ஆறுமுகசாமி என்ற லாரி கிளீனர் 2015ஆம் ஆண்டு சேலத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் படுகாயமடைந்தார். இதனால் இவர் சேலம் நீதிமன்றத்தில் நஷ்ட ஈடு கேட்டு வழக்குத் தொடுத்திருந்தார்.

மக்கள் நீதிமன்றம்

இந்த வழக்கை எடுத்துக்கொண்டு நீதிபதிகள் படுகாயமடைந்த லாரி கிளீனர் ஆறுமுகசாமிக்கு 3 லட்சத்து 7 ஆயிரம் ரூபாய் நஷ்ட ஈடாக வழங்க உத்தரவிட்டு, இதற்கான காசோலையை உடனே லாரி கிளீனர் ஆறுமுகசாமியிடம் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் நீதிபதிகள், மாஜிஸ்திரேட்டுகள் மூத்த வழக்கறிஞர்கள் உள்ளிட்ட நூற்றிற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

இதையும் படிங்க: ‘வழக்காடிகள் தேசிய மக்கள் நீதிமன்றத்தை பயன்படுத்திடுக!’ - நீதிபதி வேண்டுகோள்

ABOUT THE AUTHOR

...view details