சேலம் எடப்பாடியிலுள்ள பெரியசோகை கிராமத்தில் பட்டியலின சமூகத்தினைச் சார்ந்த ஐந்து குடும்பங்கள், கடந்த 60 வருடங்களுக்கு மேலாக அரசு இடத்தில் குடிசை வீடு கட்டி வசித்துவருகின்றனர். இந்நிலையில், இப்பகுதியில் வசிக்கக் கூடியவர்கள் இலவச மனைபட்டா வழங்கக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம், முதலமைச்சர் குறைதீர்ப்பு கூட்டத்தில் பலமுறை மனு அளித்துள்ளனர்.
மாலையாகக் கோத்த மனுக்களைக் கழுத்தில் அணிந்து பட்டா வழங்கக் கோரிக்கை! - land stamp petition
சேலம்: பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லாததால் ஆவேசமடைந்த பொதுமக்கள் மனுக்களை மாலையாக அணிந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தனர்.

மாலையாக கோர்த்த மனுக்களை கழுத்தில் அணிந்து பட்டா வழங்க கோரிக்கை!
மாலையாகக் கோத்த மனுக்களை கழுத்தில் அணிந்து பட்டா வழங்கக் கோரிக்கை
ஆனால், அரசு அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து, ஆட்சியர் அலுவலகத்தில் இதுவரை அளித்த மனுக்களின் நகலை மாலையாக அணிந்துகொண்டுவந்தனர். பின்னர். அந்த மனுக்களை ஆட்சியர் அலுவலகத்தில் அளித்தனர். மனுக்களை மாலையாக அணிந்து வந்ததால், சிறிது நேரம் ஆட்சியர் அலுவலகத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்டம்: 26 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்