சேலம்: கரோனா இரண்டாம் அலை பரவலின் தடுக்கும் நடவடிக்கையாக இன்று (மே.10) முதல் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. பொதுமக்களின் அத்தியாவசிய தேவைளுக்காக காலை 4 மணி முதல் மதியம் 12 மணிவரை கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கை கடைப்பிடிக்கும் மக்கள்: கரோனா குறைய வாய்ப்பு - lockdown
முழு ஊரடங்கால் உழவர் சந்தை, இரயில் நிலையம், ஐந்து ரோடு ஆகிய பகுதிகளில் பொதுமக்களின் கூட்டம் குறைந்து காணப்பட்டது.
முழு ஊரடங்கு
கரோனா அச்சம் காரணமாக பொதுமக்கள் வெளியில் வருவதை தவிர்த்துவருகின்றனர். இதனால் இறைச்சி கடைகள், உழவர் சந்தை ஆகிய இடங்களில் பொதுமக்கள் வழக்கத்தை விட குறைந்தே காணப்பட்டனர்.
இதையும் படிங்க:அமலானது முழு ஊரடங்கு: நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியவை!