சேலம் அடுத்த டால்மியா போர்டு அருகிலுள்ள எம்ஜிஆர் நகரில் 130 குடும்பங்கள் ரயில்வே துறைக்குச் சொந்தமான இடத்தில் 40ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். தற்போது தண்டவாள விரிவாக்கப் பணிக்காக அப்பகுதியிலுள்ள மக்களை நான்கு நாட்களில் காலி செய்யுமாறு ரயில்வே துறை நோட்டீஸ் வழங்கியது.
இந்நிலையில், அப்பகுதி மக்கள் தங்களுக்கு மாற்று இடம் வழங்கக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மேலும் பாதிக்கப்பட்ட மக்கள் மாற்று இடம் வழங்கக்கோரி, மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் தனிப்பிரிவிற்கு பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றஞ்சாட்டினர்.