தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சேலம் நெடுஞ்சாலையில் புதிய டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு - ஆட்சியர் அலுவலகம் முற்றுகை! - Salem district collector office

சேலம் - சென்னை நெடுஞ்சாலையில் திமுக கவுன்சிலருக்கு சொந்தமான இடத்தில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் மதுபானக் கடைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அப்பகுதி மக்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

Etv Bharat
Etv Bharat

By

Published : May 15, 2023, 3:52 PM IST

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்

சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியில் ஏற்கெனவே ஆறு மதுபானக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் சீலநாயக்கன்பட்டி தேசிய நெடுஞ்சாலையில், தனியார் திருமண மண்டபம் அருகில் 58ஆவது வார்டு திமுக கவுன்சிலர் கோபால் என்பவரது இடத்தில் புதிதாக டாஸ்மாக் கடை மற்றும் பார் அமைப்பதற்கான வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஏற்கெனவே தேசிய நெடுஞ்சாலை பகுதியில் டாஸ்மாக் கடைகள் இருக்கக்கூடாது என நீதிமன்றம் கூறியிருந்த நிலையில் தற்போது தேசிய நெடுஞ்சாலையில் டாஸ்மாக் கடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனைத் தடுத்து நிறுத்த வலியுறுத்தி அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பலமுறை மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால், அந்த பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் இன்று (மே 15) சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். புதிய மதுபானக் கடை அமைக்கக் கூடாது என்று எதிர்ப்புத் தெரிவித்து முழக்கங்கள் எழுப்பினர். குடியிருப்புகள் நிறைந்த பகுதி என்பதாலும் அருகில் அரசுப் பள்ளி உள்ளது என்பதாலும் மாவட்ட நிர்வாகம் டாஸ்மாக் கடைக்கு அனுமதி கொடுக்கக் கூடாது என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:TN illicit liquor Raid: கடலூரில் 88 சாராய வியாபாரிகள் கைது!

ABOUT THE AUTHOR

...view details