தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேவாலயத்தில் திரண்ட கர்நாடக மக்கள்! - salem

சேலம்: சவுரிபாளையத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் கர்நாடக மாநில பக்தர்கள் பெருமளவில் திரண்டு விடிய விடிய நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் கலந்துகொண்டனர்.

சேலம்

By

Published : Jul 23, 2019, 6:32 PM IST

சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி அருகில் உள்ளது சவுரிப்பாளையம். இந்த கிராமத்தில் மிகவும் பழமையான புனித மரிய மதலேனாள் திருத்தலம் உள்ளது. அங்கு ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் 21 மற்றும் 22ஆம் தேதிகளில் திருவிழா விமரிசையாக நடப்பது வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் திருவிழா கோலாகலமாகத் தொடங்கியது.

தேவாலயத்தில் திரண்ட கர்நாடக மக்கள்

காலை முதல் மறுநாள் அதிகாலை வரை நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் கிறிஸ்தவ பாடல்கள் பாடப்பட்டு, கூட்டங்கள் நடைபெற்றது. இந்த திருவிழாவில் கர்நாடக மாநிலத்தில் இருந்து ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் தங்கள் குடும்பத்தினரோடு கலந்துகொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details