சேலம்: தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் வருவது போல, 'பவாரியா' கும்பலைச் சேர்ந்தவரும், சேலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் தாளமுத்து நடராஜன் கொலை வழக்கில் 8 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவருமான நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் தாளமுத்து நடராஜன்(54).இவரது வீடு தேசியநெடுஞ்சாலையை ஒட்டியே உள்ளது.
வசதியான குடும்பம் கடந்த 2002-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அவரது வீட்டுக்குள் புகுந்த ”பவாரியா” கும்பல் ஒன்று தாளமுத்து நடராஜனை துடிக்க துடிக்க கொலை செய்துவிட்டு, வீட்டில் இருந்த 200 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்றுவிட்டார்கள். வீட்டின் காவலாளி கோபால் என்பவரையும் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இதுபோன்று தமிழ்நாட்டில், 40 இடங்களில், பெரிய அளவில் கைவரிசை காட்டி திருடியது ”பவாரியா”கேங்.
இந்த நிலையில் தாளமுத்து நடராஜன் கொலை வழக்கு தொடர்பாக, பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஓம் பிரகாஷ், அசோக், ராகேஷ், பீனாதேவி, ஜெயில்தார்சிங்(56), பப்லு, சந்து ஆகிய 7 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் கடந்த 2014-ம் ஆண்டு இவர்களில் ஜெயில்தார்சிங், அவரது மனைவி பீனாதேவி, சந்து, பப்லு ஆகிய நான்குபேரும் ஜாமீனில் வெளியில் வந்துள்ளனர்.