தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சேலம் கூலமேடு ஜல்லிக்கட்டு : 620 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு - சேலம் கூலமேடு திடலில் ஜல்லிக்கட்டு போட்டி தொடக்கம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சேலம் அருகே கூலமேடு ஜல்லிக்கட்டு திடலில் அரசு விதிமுறைகளுடன் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் 620 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.

சேலம் கூலமேடு ஜல்லிக்கட்டு
சேலம் கூலமேடு ஜல்லிக்கட்டு

By

Published : Jan 17, 2022, 7:02 PM IST

சேலம்: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.

அந்த வகையில் இன்று(ஜன.17) சேலம் மாவட்டம், ஆத்தூர் அடுத்த கூலமேடு பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு விதித்துள்ள கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, ஜல்லிக்கட்டு போட்டியை சேலம் மாவட்ட ஆட்சியர் செ. கார்மேகம் தொடங்கி வைத்தார்.

இரண்டு தவணை கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட மற்றும் கரோனா ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்து கொண்ட 300 மாடுபிடி வீரர்கள், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வரப்பட்ட 620 காளைகள் போட்டியில் பங்கேற்றன.

சேலம் கூலமேடு ஜல்லிக்கட்டு

இன்று காலை 10 மணிக்குத் தொடங்கிய போட்டியில் முதலில் கோயில் காளை வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டது.

முதல் சுற்றில் 75 மாடுபிடி வீரர்கள் களம் கண்டனர். வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்த காளைகளை வீரர்கள் தழுவிப் பிடிக்க முயன்றனர்.

காளைகளைத் தழுவிய வீரர்களுக்கு வெள்ளிப்பொருட்கள், சில்வர் பாத்திரம், குத்து விளக்கு போன்ற பொருட்கள் பரிசாக வழங்கப்பட்டன. வீரர்களிடம் சிக்காமல் சென்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன.

சேலம் கூலமேடு ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டு போட்டியையொட்டி 300க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

காளைகளைத் தழுவி பிடிக்க முயன்றதில் நான்கு வீரர்கள் காயமடைந்தனர்.

போட்டியின் போது மாடுபிடி வீரர் ஒருவர் ஜல்லிக்கட்டு விழாக்குழுவினர் வழங்கிய உடையை (பனியன்) அணியாமல் காளையைத் தழுவியதால், மாட்டின் உரிமையாளர் வீரரைத் தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தியது. ஜல்லிக்கட்டு போட்டி மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது.

இதையும் படிங்க: சென்னை ஐஐடியின் புதிய இயக்குநராக பொறுப்பேற்றார் பேராசிரியர் வி.காமகோடி

ABOUT THE AUTHOR

...view details