தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சேலத்தில் களைகட்டிய அறிவியல் கண்காட்சி! - one students science exhibition in salem

சேலம்: பள்ளி மாணவர்களிடையே அறிவியல் ஆர்வத்தை ஊக்குவிக்கும் விதமாக மாணவர்கள் உருவாக்கிய 485 அறிவியல் படைப்புகளின் கண்காட்சி நடைபெற்றது.

one students science exhibition in salem

By

Published : Oct 11, 2019, 4:47 PM IST

தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை சார்பாக மாணவர்களிடம் அறிவியல் ஆர்வத்தை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்டம் தோறும் மாணவர்களின் அறிவியல் திறமையை வெளிப்படுத்த அறிவியல் கண்காட்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுவருகிறது.

அதன் ஒரு பகுதியாக, சேலம் மகளிர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வித் துறை சார்பாக ஒரு நாள் அறிவியல் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இதனை மாவட்ட ஆட்சியர் ராமன் தொடங்கி வைத்தார்.

சேலத்தில் களைகட்டிய அறிவியல் கண்காட்சி

இந்தக் கண்காட்சியில் 330 அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் தங்களது 485 அறிவியல் படைப்புகளைக் காட்சிப்படுத்தியுள்ளனர். குறிப்பாக, பெண்கள் பாதுகாப்பிற்கான கருவிகள், டெங்கு காய்ச்சல் தடுப்புக் கருவிகள், மின்சார தட்டுப்பாட்டிற்கு மாற்றாக சோலார் மின் திட்டம், இயற்கை விவசாயம் உட்பட கண்காட்சியில் பலவற்றுக்கும் உதவிகரமாகவுள்ள கருவிகள் காட்சிப்படுத்தப்பட்டன.

இந்த கண்காட்சியை மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளி மாணவர்களும் பார்வையிடும் வகையில் பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.

இதையும் படிங்க: திருவண்ணாமலையில் உலக விண்வெளி வார விழா, கண்காட்சி!

ABOUT THE AUTHOR

...view details