தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வீட்டின் மேல் கூரை சரிந்து விழுந்து விபத்து - ஒருவர் உயிரிழப்பு, 3 பேர் படுகாயம்! - மூவர் படுகாயம்

சேலம்: பெரமனூர் அருகே வீட்டின் மேல் கூரை சரிந்து விழுந்த விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

One killed, three injured in roof collapse
One killed, three injured in roof collapse

By

Published : Sep 16, 2020, 4:01 PM IST

சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பெரமனூர் பகுதியில் உள்ள கோவிந்த கவுண்டர் தோட்டத்தில் லட்சுமி அம்மாள் என்பவர் கூரை வீட்டில் வசித்து வருகிறார். இன்று (செப்டம்பர் 16) பிற்பகல் மளிகை பொருள்கள் வாங்குவதற்காக வீட்டை பூட்டிவிட்டு லட்சுமி அம்மாள் வெளியே சென்றார்.

அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த கந்தசாமி என்பவர் அவரது உறவினர்களான ஆறுமுகம், பன்னீர்செல்வம், தர்மதுரை ஆகியோருடன் லட்சுமி அம்மாளின் வீட்டு திண்ணையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். இதனிடையே, எதிர்பாராதவிதமாக வீட்டின் மேல் கூரை சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

இதில், கந்தசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் இடர்பாடுகளில் சிக்கியிருந்த ஆறுமுகம், பன்னீர்செல்வம், தர்மதுரை ஆகியோரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வீட்டின் மேல் கூரை சரிந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு

தகவலறிந்து சம்பவ இடம் வந்த காவல்துறையினர் உயிரிழந்தவரின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை நடத்தினர். அதில், சேலம் மாநகர பகுதிகளில் கடந்த சில நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில், கன மழை பெய்து வருவதால், அதன் காரணமாக, வீட்டின் சுவர் வலுவிழந்து, இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க:தோஷம் கழிப்பதாக கூறி நகைகளை திருடி சென்ற போலி மந்திரவாதி கைது!

ABOUT THE AUTHOR

...view details