சேலம்: கேரள மாநிலத்தில் மிக சிறப்பாகக் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகை, ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் அஸ்த நட்சத்திரத்தில் இருந்து திருவோண நட்சத்திரம் வரையிலான 10 நாள்கள் சிறப்பாக கொண்டாடப்படும்.
ஓணம் பண்டிகையின்போது ஒவ்வொரு வீட்டிலும் மகாபலி மன்னனை வரவேற்கும் விதமாக, பல வண்ண மலர்களால் ஆன அத்தப்பூ கோலமிட்டு, குத்துவிளக்கு ஏற்றி வழிபடுவது வழக்கம்.