தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோட்டை அழகிரி நாதர் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு - சேலம் மாவட்ட ஆட்சியர்

சேலத்தில் வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு கோட்டை அழகிரிநாதர் திருக்கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.

வைகுண்ட ஏகாதேசியை முன்னிட்டு கோட்டை அழகிரிநாதர் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு
வைகுண்ட ஏகாதேசியை முன்னிட்டு கோட்டை அழகிரிநாதர் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு

By

Published : Jan 2, 2023, 8:20 AM IST

வைகுண்ட ஏகாதேசியை முன்னிட்டு கோட்டை அழகிரிநாதர் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு

சேலம் மாவட்டத்தில் உள்ள கோட்டை அழகிரி நாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் கார்மேகம், துணை கமிஷனர் லாவண்யா, மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். வைணவ மக்களின் விரத வழிபாட்டில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது வைகுண்ட ஏகாதேசி தினமாகும்.

இந்த வைகுண்ட ஏகாதேசியை முன்னிட்டு அனைத்து பெருமாள் கோயில்களிலும் சொர்க்கவாசல் திறப்பு நடைபெறும். அந்த வகையில், சேலத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ கோட்டை அழகிரிநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதேசியை முன்னிட்டு தினசரி பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்கார பூஜைகள் நடைபெற்றன.

கடைசி நாளான நேற்று (ஜனவரி 1) கோட்டை அழகிரிநாதர் மோகினி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அதனை தொடர்ந்து அழகிரிநாதர் சுவாமி திருக்கோயில்களில் அதிகாலை 3 மணியிலிருந்து, பக்தி குழுவினர் திருப்பாவை பாடிய பின்னர் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இன்று அதிகாலை 5.15 மணி அளவில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.

ரத்தின கிரீட ராஜ அலங்காரத்தில் திறக்கப்பட்ட சொர்க்கவாசல் வழியாக மூலவர் பல்லக்கில் பவனி வந்தார். அதனை தொடர்ந்து ஸ்ரீதேவி மற்றும் பூதேவி தாயாரும் திருக்கோவிலை சுற்றி வந்த பின்பு மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம், மாநகர காவல் துணை கமிஷனர் லாவண்யா, மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதோடு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடும் குளிரிலும் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

இதையும் படிங்க:சேலம் அருகே குடிநீர் இன்றி அவதிப்படும் மலைவாழ் மக்கள்!

ABOUT THE AUTHOR

...view details