தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டடப் பணிகளை ஆய்வு செய்த ஓமலூர் எம்எல்ஏ

சேலம்: காடையாம்பட்டியில் 2.27 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டடப்பணிகளை ஓமலூர் சட்டப்பேரவை உறுப்பினர் வெற்றிவேல் நேற்று ஆய்வு செய்தார்.

omalur mla inspection the building works  சேலம் மாவட்ட செய்திகள்  ஓமலூர் சட்டப்பேரவை உறுப்பினர் வெற்றிவேல்ஓமலூர் சட்டப்பேரவை உறுப்பினர் வெற்றிவேல்ஓமலூர் சட்டப்பேரவை உறுப்பினர் வெற்றிவேல்ஓமலூர் சட்டப்பேரவை உறுப்பினர் வெற்றிவேல்ஓமலூர் சட்டப்பேரவை உறுப்பினர் வெற்றிவேல்ஓமலூர் சட்டப்பேரவை உறுப்பினர் வெற்றிவேல்  காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றிய கட்டிடம்
கட்டிடப்பணிகளை ஆய்வு செய்த எம்எல்ஏ

By

Published : Jan 30, 2020, 8:15 AM IST

சேலம் மாவட்டம் காடையாம்பட்டியில் சுமார் 50 ஆண்டுக்கும் மேலான பழைய கட்டடடத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் செயல்பட்டு வந்தது. கட்டடம் பழுதடைந்து பயன்பாட்டுக்கு உகந்ததாக இல்லாததால், அதனை இடித்துவிட்டு புதிய கட்டடம் கட்டித்தர வேண்டும் என அவ்வூர் மக்கள் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் மனு அளித்தனர்.

கட்டடப் பணிகளை ஆய்வு செய்த ஓமலார் சட்டப்பேரவை உறுப்பினர் வெற்றிவேல்

இதனையடுத்து அக்கோரிக்கையை ஏற்று ரூ. 2.72 கோடி மதிப்பீட்டில் தரைத்தளம், இரண்டு மாடியுடன் கூடிய புதிய கட்டடம் கட்ட முதலமைச்சர் நிதி ஒதுக்கினார். புதிய கட்டடத்தின் கட்டுமானப் பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.

இந்தப் பணியை நேற்று ஓமலூர் சட்டப்பேரவை உறுப்பினர் வெற்றிவேல் திடீரென ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, ஒன்றிய ஆணையாளர் கருணாநிதி, வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர்.

இதையும் படிங்க:மாமண்டூர் துணை மின் நிலையத்திற்கு மின் விநியோகம் தொடக்கம்

ABOUT THE AUTHOR

...view details