தூத்துக்குடி உப்பளம் பகுதியில் இருந்து தெலங்கானா மாநிலத்திற்கு நேற்று இரவு உப்பு மூட்டையை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட லாரி ஒன்று சேலம் மாவட்டம் ஓமலூரில் ஆர்சி செட்டிப்பட்டி ரவுண்டான அருகே சர்வீஸ் சாலையை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென்று ஒட்டுநர் தன் கட்டுபாட்டை இழந்ததால் சாலையின் இடது புறம் லாரி கவிழுந்தது.
சேலத்தில் லாரி கவிழ்ந்து விபத்து: ஓட்டுநர் உயிர் தப்பினார்! - ஓட்டுநர் உயிர் தப்பினார்
சேலம்: ஓமலூர் அருகே தேசிய நெடுஞ்சாலை வழியாக உப்பு மூட்டைகளை ஏற்றி வந்த லாரி திடீரென்று கவிழ்ந்து விபத்துள்ளாகியது. இதில் அதிர்ஷ்டவசமாக ஒட்டுநர் உயிர் தப்பினார்.
சேலத்தில் லாரி கவிழ்ந்து விபத்து: ஓட்டுநர் உயிர் தப்பினார்!
இதில் உடனடியாக ஓட்டுநர் லாரியைவிட்டு வெளியில் எட்டி குதித்ததால் லேசான காயத்துடன் அவர் உயிர் தப்பினார்.
இதைதொடர்ந்து லாரி விபத்து குறித்து தகவல் அறிந்த ஓமலூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அதன் பின் ஓட்டுநரிடம் விபத்து குறித்து நடத்திய விசாரணையில், இரவு முழுவதும் தூங்காமல் லாரியை ஓட்டி வந்ததால் விபத்து நேர்ந்துள்ளதாக அவர் காவல் துறையினரிடம் தெரிவித்தார்.