தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட செவிலியர் பயிற்சி மாணவிகள் அரசு மருத்துவமனையை கண்டித்து புகார்! - செவிலி மாணவிகள்

சேலம்: செவிலியர் பயிற்சி மாணவிகள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தங்களுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படாததைக் கண்டித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.

புகார் அளித்த மாணவர்கள்
புகார் அளித்த மாணவர்கள்

By

Published : May 16, 2021, 9:12 AM IST

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மாணவர்கள் உள்பட 50 மாணவியர் நான்காம் ஆண்டு செவிலியர் படிப்பு பயின்று வருகின்றனர். இவர்களுக்கு சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், பயிற்சி வழங்கப்படுவது வழக்கம் . தற்போது இவர்கள் ஒருநாள் சிகிச்சைப் பிரிவில் பயிற்சி சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் .

இந்நிலையில், சிகிச்சை சேவையில் ஈடுபட்டுள்ள பயிற்சி மாணவியர் 4 பேருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவியர்களுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சையளிக்க நிர்வாகம் மறுத்துவிட்டது.

இதனால், அதிருப்தியடைந்த செவிலி பயிற்சி மாணவ, மாணவிகள் நேற்று (மே 15) சேலம் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர். அதில், 'தொற்று அதிகமாக பரவிவரும் நாள்களிலும் தினமும் 8 மணிநேரம் பயிற்சி சேவையில் ஈடுபட்டு வருகிறோம். எங்களுக்கு முகக்கவசம், கிருமி நாசினி, கவச உடை என்று எந்த அடிப்படை பாதுகாப்பு உபகரணங்களும் மருத்துவமனை நிர்வாகம் வழங்கவில்லை.

எங்களில் பலர் கரோனா சிகிச்சை வார்டிலும் பயிற்சி சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளோம். எனவே எங்களுக்குப் பாதுகாப்பு பொருள்கள் வழங்கவும், தொற்று ஏற்பட்ட மாணவியருக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சையளிக்க வேண்டும்' எனக் குறிப்பிட்டிருந்தனர்.

ABOUT THE AUTHOR

...view details