தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உலக செவிலியர் தினம்: மருத்துவமனையில் கேக் வெட்டி கொண்டாட்டம்! - trees planting

சேலம்: உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு சேலம் அரசு மருத்துவமனையில் செவிலியர் பயிற்சி மாணவிகள் கேக் வெட்டியும், மருத்துவமனை வளாகத்தில் மரம் நட்டும் கொண்டாட்டினர்.

செவிலியர்

By

Published : May 12, 2019, 3:17 PM IST

Updated : May 12, 2019, 4:12 PM IST

பொதுமக்களுக்கு செவிலியர் ஆற்றிவரும் உன்னத தொண்டை உலகிற்கு உணர்த்தும் வகையில் சர்வதேச செவிலியர் தினம் ஆண்டுதோறும் மே 12ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன்படி, மே 12ஆம் தேதியான இன்று சேலம் அரசு தலைமை மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர் மற்றும் செவிலியர் பயிற்சி மாணவிகள் மருத்துவமனை வளாகத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி செவிலியர் பணியை முழு மனதோடு செம்மையாக பணியாற்றுவோம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

இதைத்தொடர்ந்து, கேக் வெட்டி ஒருவருக்கொருவர் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்ட அவர்கள், மருத்துவமனை வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு உலக செவிலியர் தினத்தை மிகச் சிறப்பாக கொண்டாடினார்கள்.

உலக செவிலியர் தின கொண்டாட்டம்
Last Updated : May 12, 2019, 4:12 PM IST

ABOUT THE AUTHOR

...view details