இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”சேலம் மாவட்டம் முழுவதும் உள்ள பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியே வருபவர்கள், கடைகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்டவற்றில் பணிபுரிபவர்கள், அனைத்து வகையான அலுவலகங்கள் உள்ளிட்ட அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.
தனிமைப்படுத்துதலுக்கான விதிகளை மீறுவோர்களுக்கு ரூ.500 அபராதமும், முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.200 அபராதமும், பொது இடங்களில் எச்சில் துப்புவோர்களுக்கு ரூ.500 அபராதமும், தகுந்த இடைவெளியை பின்பற்றாதவர்களுக்கு ரூ.500 அபராதமும், கட்டுப்பாட்டு பகுதிகளில் விதிகளை மீறும் தனி நபர்களுக்கு ரூ.500 அபராதமும், தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், கடைகள் உள்ளிட்ட அனைத்திலும் விதிகளை மீறினால் 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்” என எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும், “கரோனா வைரஸ் நோய் தொற்று பரவல் ஏற்படாமல் பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள அனைத்து அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் இலவசமாகவும், தனியார் மருத்துவமனைகளில் ரூ.250 கட்டணத்துடனும் இந்நோய்க்கான தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.