தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நித்தியானந்தா முன்னாள் சீடர் தூக்கிட்டு தற்கொலை! - nithyananda news

சேலம்: நித்தியானந்தாவின் முன்னாள் சீடர் தற்கொலை செய்யும் முன் வெளியிட்ட வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

suicide
suicide

By

Published : Mar 7, 2020, 1:21 PM IST

சேலம் மாவட்டம் ஆத்தூர் அடுத்த ஆறகழூர் ஊராட்சி ஏரிக்காட்டை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரின் மகன் தினேஷ், முதுநிலை பொறியியல் பட்டதாரி ஆவர். ஆன்மீகத்தின் மீது உள்ள ஆர்வத்தில் நித்தியானந்தாவின் சீடராக தினேஷ் பணியாற்றியுள்ளார்.

மேலும், தனது பெயரை வீரபத்ரானந்தா எனவும் மாற்றிக்கொண்டார். பின்னர், சில மாதத்தில் அப்பணியிலிருந்து விலகிய அவர் சென்னையில் யூடியூப் செனல் ஒன்றை நடத்திவந்துள்ளார். இதற்கிடையே, சென்னையைச் சேர்ந்த விஸ்வரூபாவின் மகள் நித்யானந்த கலா என்பவருக்கும் தினேஷூக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது காதலாக மாறியுள்ளது. ஆனால், இவர்களின் காதலுக்கு நித்யானந்த கலாவின் தந்தை எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

தற்கொலைக்கு முன்பு தினேஷ் பதிவு செய்து வெளியிட்ட வீடியோ.

இதனால், இருவரும் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர். அதன் பின்னர், சொந்த ஊருக்குச் சென்ற தினேஷ், வீ்ட்டில் யாரும் இல்லாத போது திடீரென்று தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். மேலும், தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பாக தினேஷ் ஏன் தற்கொலை செய்து கொள்கிறேன் என்று விளக்கமளிக்கும் வகையில், வீடியோ பதிவு செய்து தனது நண்பர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்பியுள்ளார். தற்போது, இந்த காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

தூக்கிட்டு தற்கொலை செய்த நித்தியானந்தா முன்னாள் சீடர்.

இதையும் படிங்க:அந்தரங்க உறுப்பில் ரூ.8 கோடி மதிப்புள்ள கொக்கைன் கடத்தல் - பெண் கைது!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details