நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கோலாகலமாக நேற்று (நவம்பர் 14) கொண்டாடப்பட்டது. புத்தாடை அணிந்தும், இனிப்புகள் வழங்கியும், பட்டாசு வெடித்தும் பொதுமக்கள் உற்சாகமாக கொண்டாடினர். மேலும், தீபாவளிக்கு அடுத்த நாள் கறிநாளாக கொண்டாடப்படும் என்பதால், மக்களின் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. அதன் காரணமாக, இறைச்சி விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி முடிந்தும் இறைச்சிக் கடைகளில் குவியும் மக்கள் கூட்டம்! - deepavali special
சேலம்: தீபாவளிக்கு அடுத்த நாள் கறிநாள் என்பதால், இறைச்சிக் கடைகளில் மக்களின் கூட்டம் அதிகளவில் காணப்படுகிறது.
deepa
அந்த வகையில், சேலம் சூரமங்கலம் மீன் சந்தையிலும் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. கோழி இறைச்சி விலை கிலோ 150இல் இருந்து 170-180 வரை விற்கப்படுகிறது. ஆட்டு இறைச்சி விலை கிலோ 680க்கு விற்கப்படுகிறது. மீன் விற்பனை விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது.