சேலம் மாவட்டம் தலைவாசல் வி.கூட்டுரோட்டில் சர்வதேச தரத்தில் அமையவுள்ள ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சி பூங்கா, கால்நடை மருத்துவக் கல்லூரிக்கு வருகின்ற 9ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டுகிறார். அதனைத் தொடர்ந்து விவசாயப் பெருவிழா, கண்காட்சி, கருத்தரங்கினையும் அவர் தொடங்கி வைக்கிறார்.
இவ்விழாவில் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டபேரவை உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசுத் துறை அலுவலர்கள் கலந்துகொள்கின்றனர். விழாவிற்கான பந்தல் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. 200க்கும் மேற்பட்ட கண்காட்சி அரங்குகள் இங்கு அமைக்கப்படவுள்ளன. சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் அமரும் வகையில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது.