சேலம் மாவட்டத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக மாநகராட்சி ஆணையராகப் பொறுப்பு வகித்துவந்த ரெ.சதீஷ், அண்மையில் கிருஷ்ணகிரி மாவட்ட வருவாய் அலுவலராக இடமாற்றம் செய்யப்பட்டார்.
சேலத்திற்கு புதிய மாநகராட்சி ஆணையர் - சேலம் மாநகராட்சி ஆணையர் என்.ரவிச்சந்திரன்
சேலம் மாநகராட்சியின் புதிய ஆணையராக என்.ரவிச்சந்திரன் இன்று (நவ.12) பொறுப்பேற்றார்.
சேலம் மாநகராட்சி ஆணையர்
இதனையடுத்து, ஆவடி மாநகராட்சி ஆணையராகப் பணியாற்றி வந்த என். ரவிச்சந்திரன், சேலம் மாநகராட்சி ஆணையராக நேற்று முன்தினம் நியமிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து, சேலம் மாநகராட்சியின் புதிய ஆணையராக என்.ரவிச்சந்திரன் இன்று(நவ.12) பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு சேலம் மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.
இதையும் படிங்க:உத்தமசோழபுரத்தில் புதிய இணையவழி பயிற்சி!