சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் 19.10.2017 அன்று சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் தீவிர தீக்காய சிகிச்சை பிரிவு கட்டடத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டது. தற்போது இரண்டு ஆண்டில் அக்கட்டடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சிக்காக சேலம் அரசு மருத்துவமனையில் உள்ள புதிய தீக்காய சிகிச்சை கட்டடத்தின் முன்பு காணொலி வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் சேலம் அரசு மருத்துவமனை முதல்வர் பாலாஜி நாதன் உள்ளிட்ட அரசு மருத்துவர்கள், செவிலியர்கள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க:பல்வேறு கட்டடங்கள் பாலங்கள் திறப்பு!