சேலம் மாவட்டத்தில் முக்கிய சுற்றுலாத் தலமாக திகழ்ந்து வரும் ஏற்காடு மலை அடிவாரத்தில் குருவம்பட்டி வன உயிரியல் பூங்கா அமைந்துள்ளது. பச்சை பசேல் என்று எழில் மிகுந்து காட்சி தரும் இந்தப் பூங்கா 75 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் கடமான், முதலை, வெள்ளை மயில்கள் உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள், பறவைகள் உள்ளிட்டவை தமிழ்நாடு அரசு வனத்துறை சார்பில் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
வன உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகள், பறவைகளைக் கண்டு ரசிக்க தினமும் நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். எனவே கோடை விடுமுறை இன்னும் சில வாரங்களில் தொடங்க உள்ளதால், சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.