எம்பிபிஎஸ் படிப்பில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு (நீட்) நாடு முழுவதும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இத்தேர்வை நாடு முழுவதும் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதுகின்றனர். குறிப்பாக தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 1.5 லட்சம் பேர் எழுதுகின்றனர். அதேபோல், சேலம் மாவட்டத்தை பொறுத்தவரையில் மாணவர்கள் தேர்வெழுத 18 மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் 16,699 மாணவர்கள் நீட் தேர்வு எழுதுகின்றனர்!
சேலம் மாவட்டம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 18 மையங்களில் 16,699 மாணவர்கள் நீட் தேர்வு எழுதுகின்றனர்.
நீட் தேர்வு
இதில் சுமார் 16 ஆயிரத்து 699 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். இதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வு மையத்திற்கு உரிய நேரத்தில் வரவேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.