சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகேயுள்ள சின்னப்பம்பட்டி கிராமத்தில் ராஜா என்பவர் தன்னுடைய வீட்டின் முன்பு நிழலுக்காக வேப்பமரம் வளர்த்து வருகிறார். இந்நிலையில், இந்த மரத்தின் கிளைகளில் இருந்து திடீரென தாரை தாரையாக பால் வடிந்து கீழே ஊற்றியது. தொடர்ந்து நான்கு நாட்களாக அதிக அளவில் வற்றாமல் பால் வடிந்து வந்து கொண்டே இருக்கிறது. இதனைப் பார்த்து வியந்து போன அப்பகுதி மக்கள் அந்தப் பாலை பிடித்து பிடித்து குழந்தைகளுக்கு கொடுப்பதாகக் கூறப்படுகிறது.
வேப்ப மரத்தில் பால் வடிந்தால் மாரியம்மா மகிமை கிடையாது! - வேப்பமரத்தில் வடிந்த பால்
சேலம்: வேப்பமரத்தில் பால்வடிவதைக்கண்ட மக்கள் மாரியத்தாள் மகிமை என நினைத்து நூதன முறையில் சாமி கும்பிட்ட சம்பவம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
வேப்பமரத்தில் பால்வடிவது மாரியம்மாள் மகிமையும் இல்லை, மக்களின் அறியாமையால் காலம் காலமாக நம்பப்பட்டு வருகிறது. வேப்பமரத்தில் பால் வடிவது அறிவியல் நிகழ்த்தும் அதிசயமாகும். வேப்ப மரத்திற்கு அருகில் அதிகம் தண்ணீர் இருந்தால், மரத்தினுள் செல்லும் தண்ணீரின் அளவு அதிகமாகி, அதன்காரணமாய் வேப்பமரப் பட்டைக்கு அடியிலுள்ள திசு (புளோயம்) பாதிக்கப்படுகிறது.
இதனால் மரப்பட்டைகள் வெடிக்க, மரத்திலுள்ள மாவுச்சத்து அதிகத் தண்ணீர் கலந்து பால்போல் மாறி, அந்த வெடிப்பின் வழியே கசிந்து சொட்டும். இதைத்தான் வேப்பமரத்தில் பால்வடிவதாக நாம் எண்ணுகிறோம், காரணம் புரியாததால் மாரியாத்தாள் மகிமை என்று நம்புகிறோம்.