சேலம் நகரின் மையத்தில் மிகவும் பழமையான ஸ்ரீ சுகவனேஸ்வரர் ஆலயம் உள்ளது. இந்த கோயிலில் கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடந்து வருகிறது.
இந்நிலையில், தொடர் மழை பெய்ததன் காரணமாக கோயில் முழுவதும் செடி, கொடிகள் வளர்ந்துள்ளது. இதை அறிந்த சேலம் சௌடேஸ்வரி கல்லூரி, சேலம் அரசு கலைக்கல்லூரியின் தேசிய மாணவர் படையைச் சேர்ந்த மாணவர்கள் செடி, கொடிகளை இன்று காலை அகற்றி சுத்தம் செய்தனர்.