தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் குறித்து பொதுமக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்..! - National Consumer Day

சேலம்: நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் குறித்து பொதுமக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என மாவட்ட சார்பு நீதிபதி சக்திவேல் கேட்டுக்கொண்டுள்ளார்.

National Consumer Day
National Consumer Day

By

Published : Dec 25, 2019, 10:42 AM IST

1986ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் தேதி மத்திய அரசு நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தை உருவாக்கியது. இந்த நாள் நாடுமுழுவதும் தேசிய நுகர்வோர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்த வகையில், இந்த நாளையொட்டி சேலம் மாவட்டம் அஸ்தம்பட்டி பகுதியில் தேசிய நுகர்வோர் தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சார்பு நீதிபதியுமான சக்திவேல் கலந்துகொண்டார்.

அப்போது, அவர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார். அதன்பின், பொதுமக்களிடம் அவர் பேசுகையில், ‘உணவுப்பொருட்களில் கலப்படம் இருந்தால் புகார் அளிக்கலாம். அந்த புகார் மீது விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும், நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் குறித்து பொதுமக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்’ என கேட்டுக் கொண்டார்.

தேசிய நுகர்வோர் தினம் கொண்டாட்டம்

மேலும், இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு நுகர்வோர் மற்றும் மக்கள் உரிமைகள் புலனாய்வு கமிட்டி மாநில தலைவர் வழக்கறிஞர் செல்வம், வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதையும் படிங்க:கல்லூரி மாணவிகளுக்கு மனித உரிமைகள் குறித்த கருத்தரங்கம்

ABOUT THE AUTHOR

...view details