இந்தியா முழுவதும் ஏழு கட்டங்களாக மக்களவை தேர்தல்நடைபெறுகிறது. இரண்டாம் கட்டமாக தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெறுகிறது.தேர்தல் நெருங்கி வருவதையொட்டி பல்வேறு அரசியல் கட்சியினர் கடந்த மார்ச் 19 ஆம் தேதி முதல் மார்ச் 26 ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்தனர்.
இதில் சேலம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட 37 வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்தனர். இதனைத்தொடர்ந்து புதன்கிழமை வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. இதில், சேலம் மக்களவை தொகுதி தேர்தல் பொது பார்வையாளர் ராஜேஷ் மஞ்சு முன்னிலையில், ஆட்சியர் ரோகிணி தலைமையில் வேட்பாளர்கள், முகவர்கள் பங்கேற்றனர்.37 வேட்பாளர்கள் 47 மனுக்களை தாக்கல் செய்திருந்தனர் அதில் 12 வேட்பாளர்களின் 22 மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில் 25 வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டது. அதைத்தொடர்ந்து,மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.