தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'அனைத்தும் தனியார்மயமானால் அரசின் வேலைதான் என்ன?' - சீமான்

சேலம்: கல்வி, மருத்துவம், தண்ணீர் என அனைத்தும் தனியார்மயமானால் அரசின் வேலைதான் என்ன என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

By

Published : Mar 13, 2021, 10:35 AM IST

நாம் தமிழர் கட்சி (நாதக) ஒருங்கிணைப்பாளர் சீமான்
நாம் தமிழர் கட்சி (நாதக) ஒருங்கிணைப்பாளர் சீமான்

சேலத்தில் நடந்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டத்தில் அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்தார்.

அதன் பின்னர் பேசிய அவர், "கல்வி, மருத்துவம், தண்ணீர் என அனைத்தும் தனியார்மயம் ஆகிவிட்டால் அரசின் வேலைதான் என்ன? இந்தியா சந்தைப் பொருளாதாரத்தைக் கொண்டுள்ளது, சந்தையில் பொருளை வியாபாரம் செய்யலாம். அங்கு வாழ்கை இருக்காது.

சந்தைப் பொருளாதாரத்தை எற்றுக் கொண்ட தலைவர்கள், வெளிநாட்டு வியாபாரிகள்-பொது மக்களுக்கு இடையே தரகு வேலை பார்க்க முடியும். நல்ல தலைவர்களாக இருக்க முடியாது" என்றார்.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்

அதனைத் தொடர்ந்து மேடையில் கட்சி வேட்பாளர்களை சீமான் அறிமுகம் செய்து வைத்தார். இந்நிகழ்வில் கட்சி நிர்வாகிகள், ஏராளமான தொண்டர்கள் பங்கேற்றனர்.

இதையும் படிங்க:அமமுக வேட்பாளர்களின் போட்டி, அதிமுக பிரபலங்களின் வெற்றியை பாதிக்குமா?

ABOUT THE AUTHOR

...view details