இசைஞானி இளையராஜா இன்று (ஜூன்.02) தனது 78ஆவது பிறந்தநாளைக் கொண்டுகிறார். இதனையடுத்து அவருக்கு திரைப் பிரபலங்களும் ரசிகர்களும் சமூக வலைதளங்கள் வாயிலாக வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக சேலம், பொன்னம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்த பரந்தாமன் என்கிற அரசு ஊழியர், இசைஞானி இளையராஜாவின் இசை மீது கொண்டுள்ள ஈர்ப்பால் இசைக்கருவிகள், இசைக் குறியீடுகளால் இளையராஜாவின் உருவத்தை வரைந்து அசத்தியுள்ளார்.
’இசைக்கருவிகள், இசைக் குறியீடுகளால் இளையராஜாவின் உருவம்’ - அசர வைத்த அரசு ஊழியர்
சேலம்: அரசு ஊழியர் பரந்தாமன் என்பவர் இசைஞானி இளையராஜாவின் பிறந்த நாளை முன்னிட்டு இசைக்கருவிகள், இசைக் குறியீடுகளால் அவரது உருவத்தை வரைந்து அசத்தியுள்ளார்.
ilaiyaraaja
டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் வரைந்த இந்த ஓவியத்தில், இளையராஜாவின் தனித்திறமைகளான எழுத்தாளர், இசைக் கலைஞர், புகைப்பட நிபுணர், பாடலாசிரியர், பாடகர் உள்ளிட்ட 10 பன்முகத் திறமைகளாக பிரித்துக் காட்டியிருக்கிறார். ”இந்த ஓவியத்தை விரைவில் இளையராஜாவை சந்தித்து பரிசளிப்பேன்” எனவும் பரந்தாமன் தெரிவித்துள்ளார்.