தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திமுக ஆட்சி அமைந்தவுடன் ஜவுளி பூங்கா அமைக்கப்படும்: தயாநிதி மாறன் - tamilnadu latest news

சேலம்: 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக ஆட்சி அமைந்தவுடன் ஜவுளி பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று திமுக எம்.பி தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார்.

திமுக ஆட்சிக்கு அமைந்தவுடன் ஜவுளி பூங்கா அமைக்கப்படும்
திமுக ஆட்சிக்கு அமைந்தவுடன் ஜவுளி பூங்கா அமைக்கப்படும்

By

Published : Jan 5, 2021, 6:32 AM IST

சேலத்தில் இரண்டாம் கட்டமாக திமுக எம்.பி தயாநிதி மாறன் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். முதல் நிகழ்ச்சியாக நெசவாளர்கள், லாரி உரிமையாளர்கள், சுமை தூக்கும் தொழிலாளர்கள் உள்ளிட்டோருடன் அவர் கலந்துரையாடினார்.

அப்போது எம்.பி தயாநிதி மாறன் பேசுகையில், "2021 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக ஆட்சி அமைந்தவுடன் ஜவுளி பூங்கா அமைத்திட நடவடிக்கை எடுக்கப்படும். கூட்டுறவு சங்கங்கள் மூலமாக நூல் விற்பனை செய்யப்படும்.

திமுக என்றும் சிறுபான்மையினருக்கு துணையாக உள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு அதிமுகவும், பாமகவும் ஆதரவு தெரிவித்துள்ளன. எனவே வரும் தேர்தலில் அவர்களுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும்.

பல திட்டங்களை நிறைவேற்றியவர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி. கரோனா தடுப்பூசி விஷயத்தில் மக்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்.

சேலத்தில் வணிக வர்த்தக மையம் அமைத்திட நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

இதையும் படிங்க: அமைச்சர்களுடன் எடுத்த ஃபோட்டோவை காட்டி ரூ.25 லட்சம் மோசடி!

ABOUT THE AUTHOR

...view details