தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சேலம் அருகே சோகம்: தாயும் குழந்தையும் உயிரிழப்பு - தாயும் குழந்தையும் உயிரிழப்பு

சேலம் அருகே கிணற்றில் தவறி விழுந்த குழந்தையும் காப்பாற்ற முயன்ற தாயும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் அருகே சோகம்
சேலம் அருகே சோகம்

By

Published : Nov 16, 2022, 10:13 AM IST

சேலம்: மாசிநாய்க்கன்பட்டி இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி வினோத். இவருக்கு திருமணமாகி மீனா (27) என்ற மனைவியும், சுபஸ்ரீ என்ற 11 மாத பெண் குழந்தையும் உள்ளனர். வினோத் மாசி நாயக்கன்பட்டி வாத்தியார் காடு பகுதியில் நிலம் ஒன்றை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று (நவ. 15) பிற்பகல் 12 மணி அளவில் மீனா, குழந்தை சுபஸ்ரீயை தூக்கி கொண்டு வீட்டின் அருகே உள்ள தரைமட்ட கிணறு பகுதியில் அமர்ந்து குழந்தைக்கு சாப்பாடு ஊட்டி விட்டார். அப்போது குழந்தை தவறி தரை மட்ட கிணற்றில் விழுந்துவிட்டது.

இதை அறிந்த தாய் மீனா அதிர்ச்சியடைந்து உடனே அவரும் கிணற்றில் குதித்து குழந்தையை காப்பாற்ற முயன்றார். ஆனால் சிறிது நேரத்தில் குழந்தையும் மீனாவும் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர். இதை அறிந்த உறவினர்கள் கிணற்றில் குதித்து மீனா மற்றும் குழந்தையின் சடலங்களை மீட்டனர்.

பிறகு உறவினர்கள் இது குறித்து சேலம் அம்மாபேட்டை காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அம்மாபேட்டை காவல் ஆய்வாளர் கணேசன் மற்றும் போலீசார் விரைந்து வந்து மீனா மற்றும் குழந்தையின் சடலங்களை மீட்டு உடற்கூறு ஆய்வு செய்ய குமாரமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: பிறப்புறுப்பில் தாக்கி பாஜக பிரமுகர் படுகொலை - போலீஸ் விசாரணை!

ABOUT THE AUTHOR

...view details