தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பருவமழை முன்னெச்சரிக்கை குறித்து சேலத்தில் ஆலோசனை! - Salem monsoon precautions meeting

சேலம்: வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளதையடுத்து மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சேலத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

பருவமழை முன்னேச்சரிக்கை குறித்து சேலத்தில் ஆலோசனை!

By

Published : Oct 23, 2019, 10:45 PM IST

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தற்போது தீவிரமடைந்துள்ள நிலையில், மாநிலம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுவருகின்றன. அந்த வகையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அனைத்துத் துறை அலுவலர்களுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இதனையடுத்து, சேலத்தில் பருவமழைக் காலத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சேலம் மாநகர காவல் ஆணையர் செந்தில்குமார் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாநகர காவல் துறை, மாநகராட்சி நிர்வாகம், வருவாய்த் துறை சார்பில் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

இதில் தற்போது தீவிரமடைந்துள்ள பருவமழையை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பது குறித்து, தாழ்வான பகுதிகளை கண்டறிந்து அந்தப் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முகாம்களை அமைப்பது குறித்து நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.

ABOUT THE AUTHOR

...view details