தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மூதாட்டியை ஏமாற்றி பணம் திருட்டு - online

சேலத்தில் வங்கி கணக்கில் இருந்த பணத்தை ஆன்லைன் மூலமாக நூதன முறையில் திருட்டிய மோசடி கும்பல் குறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.

ds
ds

By

Published : Jun 16, 2021, 3:37 AM IST

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகில் உள்ள கருமலைக்கூடல் பகுதியை சேர்ந்தவர் செல்லம்மாள்(74). ஊராட்சி தொடக்க கல்வி அலுவலராக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். இவரது கணவர் அன்பழகன் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்ற நிலையில் கடந்த வாரம் கரோனோ நோயால் பாதிக்கப்பட்டு சேலம் இரும்பாலை கரோனா சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 10ஆம் தேதி அன்று வீட்டிலுள்ள தொலைபேசிக்கு எஸ்பிஐ மேட்டூர் வங்கி கிளையில் இருந்து ஊழியர் பேசுவதாக அழைப்பு வந்துள்ளது. அப்போது, உங்களுக்கு புதிய வங்கி கணக்கு புத்தகம் மற்றும் ஏடிஎம் கார்டு வந்துள்ளதால் வங்கிக்கு வந்து பெற்றுக்கொள்ளுமாறும், இதற்கு முன்பாக வங்கி கணக்கு எண் விவரங்கள் மற்றும் ஒடிபி எண்ணை பகிர்ந்துகொள்ளுமாறு தொலைபேசியில் தெரிவித்துள்ளனர்.

வங்கியில் இருந்து பேசுவதாக நம்பி, மூதாட்டியும் செல்போனில் வந்த வங்கிக் கணக்கு விவரங்கள் மற்றும் ஒடிபி எண்ணை செல்லம்மாள் கூறியுள்ளார். இதனைடுத்து அரை மணி நேரத்தில் 10 லட்சத்து 32 ஆயிரத்து 500 ரூபாய் ஆன்லைன் பரிவர்த்தனை மூலமாக,ஆறு வங்கிக் கணக்குகளுக்கு மோசடி கும்பல் மாற்றியுள்ளது.

இது தொடர்பாக முன்கூட்டியே வங்கி மேலாளரிடம் கூறியபோதும் அலட்சிய போக்காக செயல்பட்டதால் வங்கியில் இருந்து 10 லட்சம் ரூபாயும் வேறு கணக்குகளுக்கு மாறியது. புகார் அளித்தவுடன் முன் விரைந்து நடவடிக்கை எடுத்து வங்கி கணக்கை முடக்கி இருந்தால் பணம் முழுமையாக சென்று இருக்காது என்று மூதாட்டி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட மூதாட்டி புகார் மனு அளித்துள்ளார். மேலும் வங்கியில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் இதில் தொடர்பு இருப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். சேலத்தில் வங்கியில் இருந்து பேசுவதாக கூறிக்கொண்டு வங்கி கணக்கில் இருந்து 10 லட்சம் ரூபாய் பணத்தை ஆன்லைன் மூலமாக மோசடி கும்பல் திருடியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details