சேலம்: பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த தினத்தை முன்னிட்டு பாஜக பிரசாரப் பிரிவு மற்றும் வெளியீட்டுப்பிரிவு மாவட்டச்செயலாளர் கோபால் ஏற்பாட்டில் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் குடிநீர் கிடைக்க வேண்டும் என்று முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில் இன்று(செப்.22) 10 ரூபாய்க்கு 1 லிட்டர் மோடி ஜி குடிநீர் பாட்டில் விற்பனை இன்று கன்னங்குறிச்சி பகுதியில் தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் திரளான பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டு விற்பனையைத் தொடக்கி வைத்தனர்.