மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் கடந்த மாதம் மதுரையில் தனது முதல்கட்ட தேர்தல் பரப்புரையைத் தொடங்கினார். அதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் தேர்தல் பரப்புரையை மேற்கொண்டு வந்த அவர், சேலத்தில் தனது நான்காம் கட்ட தேர்தல் பரப்புரையை இன்று தொடங்கினார்.
சேலம், வேலூர் மாவட்டங்களில் இன்று (ஜன.3 ) முதல் ஜன.6ஆம் தேதிவரை தேர்தல் பரப்புரையில் கமல்ஹாசன் ஈடுபடுகிறார்.
இதற்காக இன்று மதியம் 3 மணியளவில், சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் சேலம் வந்தடைந்த கமல்ஹாசனுக்கு விமான நிலையத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.