தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசுக்குச் செலவு, மக்களுக்கு லாபம்... வேறு எந்த மாற்றமும் நிகழாது - கமல்ஹாசன் - சேலத்தில் கமல்ஹாசன் இரண்டு நாள் தேர்தல் பரப்புரை

சேலம்: தமிழ்நாட்டில் உள்ள ஏரி கண்மாய்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் நமது சொத்துகள் என்றும், அவற்றை மாசுபடாமல் பாதுகாக்க வேண்டியது நமது கடமை எனவும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.

mnm leader kamalhassan
mnm leader kamalhassan

By

Published : Jan 4, 2021, 3:39 PM IST

சேலத்தில் இரண்டு நாள்களாகச் சூறாவளி தேர்தல் பரப்புரை மேற்கொண்டுள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்கள் சந்திப்பில், "தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசு ரூ.2,500 என்பது அரசுக்குச் செலவு; மக்களுக்கு லாபம். அதைத்தவிர வேறு மாற்றம் எதையும் ஏற்படுத்தாது.

சேலம் - சென்னை எட்டு வழிச்சாலைத் திட்டம் அமல்படுத்தப்பட்டால் ஒன்றரை லட்சம் பனை மரம், இரண்டு லட்சம் தென்னை மரம் அழிக்கப்படும். 500-க்கும் மேற்பட்டோர் தங்கள் வீடுகளை முழுமையாக இழப்பார்கள்.

வேளாண்மை கடுமையாகப் பாதிக்கப்படும். சென்னையிலிருந்து சேலத்திற்கு விரைவாக வந்து சேர்ந்துவிடலாம் என்ற ஒரு செளகரியத்திற்காக எல்லாவற்றையும் அழிக்க வேண்டியதில்லை.

அரசுக்குச் செலவு, மக்களுக்கு லாபம்

நீர்நிலைகள், கனிம வளங்கள் அனைத்தையும் பாதுகாக்க வேண்டும். அவற்றை வெட்டியெடுத்து விற்றுவிட்டால் சாப்பிட ஒன்றும் கிடைக்காது. இவற்றை மேலை நாடுகளில் பாதுகாத்துவைத்திருக்கிறார்கள்.

சுற்றுச்சூழலைப் பாதுகாக்க மலைகளையும், கனிம வளங்களையும் பாதுகாக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும். அதற்காக மக்கள் நீதி மய்யம் சார்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த ஏழு அம்ச திட்டம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:மத்திய பிரதேசத்தில் அதிகரிக்கும் பறவைக் காய்ச்சல் அச்சம்

ABOUT THE AUTHOR

...view details