தமிழ்நாடு அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில், சேலம் மாவட்டம் வீரபாண்டி சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட மல்லூர் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் இன்று விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது .
அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கிய எம்.எல்.ஏ! - Manomani MLA donates bicycles to government school students
சேலம்: வீரபாண்டி சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு எம்.எல்.ஏ மனோன்மணி விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.
![அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கிய எம்.எல்.ஏ! free cycle distribution](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-6066236-407-6066236-1581672030208.jpg)
free cycle distribution
விலையில்லா மிதிவண்டிகள் வழங்கிய மனோன்மணி எம்.எல்.ஏ
இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற வீரபாண்டி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் மனோன்மணி அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை நேரில் வழங்கினார். இதில், 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டு விலையில்லா மிதிவண்டிகளை மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டனர்.
இதையும் படிங்க: தகவல் தொழில்நுட்பத் துறைக்கு ரூ.153.97 கோடி ஒதுக்கீடு!