சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் முழு உருவச் சிலையை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார். அப்போது பேசிய அவர், ”வெளிநாடு செல்லும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்துகள். அவர் முதலீடுகளுடன் வந்தால் மகிழ்ச்சி. திமுக தலைவராகி என்ன சாதித்தீர்கள் என்று கேள்வி கேட்டு விவாதம் செய்கிறார்கள். கடந்த தேர்தலில் 89 எம்எல்ஏக்கள் வெற்றி பெற்ற நிலையில் தற்போது அதன் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளது.
தமிழ்நாட்டு மக்களுக்கு எடப்பாடியை தெரியுமா? -மு.க. ஸ்டாலின் - திமுக தலைவர் ஸ்டாலின்
சேலம் மாவட்டத்தை தவிர்த்து வேறு எங்கு சென்றாலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தெரியுமா? என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
stalin
சேலம் மாவட்டத்தை தவிர்த்து வேறு எங்கு சென்றாலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தமிழ்நாடு மக்களுக்கு தெரியுமா? என் முகம் தேவையில்லை என் பெயரை சொன்னாலே தமிழ்நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்” என்றார்.