மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (MBC) பட்டியலில் வன்னியர் சமுதாயத்தை சேர்த்து அந்த மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கி அவர்களின் வாழ்க்கை நிலையை உயர்த்தியவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிதான் என்றும், அடுத்து திமுக ஆட்சி அமைத்தால் வன்னியர் சமூகத்துக்கு உள் ஒதுக்கீடு வழங்கப்படும் எனவும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் சமீபத்தில் பேசியிருந்தார்.
இந்நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் அருள் சேலத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ‘விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வெற்றிபெற வேண்டும் என்பதற்காக, திமுக தலைவர் ஸ்டாலின் வன்னியர்களுக்கு திமுகதான் இட ஒதுக்கீடு வழங்கியதாகவும் வன்னியர் சமுதாய தலைவர்களுக்கு மணிமண்டபம் கட்டுவதாகவும் வாக்குறுதி கொடுத்து வருகிறார். வன்னியர்களுக்கு ஒரே தலைவர் மருத்துவர் ராமதாஸ் மட்டும்தான், வேறு யாரும் இல்லை.