தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'கொத்தடிமை அதிமுக ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்': ஸ்டாலின் விமர்சனம்

சேலம்: கொத்தடிமை அதிமுக ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

ஸ்டாலின் பரப்புரை
ஸ்டாலின் பரப்புரை

By

Published : Feb 23, 2021, 6:19 AM IST

சேலம் மாவ‌ட்ட‌ம் சிந்தாமணியூர் பகுதியில் நடைபெற்ற 'உங்கள் தொகுதியின் ஸ்டாலின்' நிகழ்ச்சியில் திமுக தலைவர் ஸ்டாலின் சட்டப்பேரவை தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், "எடப்பாடி பகுதியில்தான் அதிகளவு மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இங்கு அதிமுகவினர் நீர்த்தேக்கம் அமைப்பதாக கூறி ஊழல் செய்கின்றனர்.

கடந்த 40 ஆண்டுகளாக திமுக எடப்பாடி தொகுதியில் வெற்றி பெறவில்லை என்று கூறுவது பொய். 2006 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியான பாமக வெற்றி பெற்றது. காவேரி நீர் விவகாரத்தில் நமக்கான உரிமை பறிபோக காரணமானவர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

புதிய கல்விக் கொள்கை, நீட் தேர்வு, குடியுரிமை சட்டம் உள்ளிட்டவற்றை அவர் ஆதரித்தார். ஆகவே இந்த கொத்தடிமை அதிமுக ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க: தமிழ்நாடு வெற்றி நடை போடவில்லை, வெத்து நடை தான் போடுகிறது' - ஸ்டாலின் விமர்சனம்

ABOUT THE AUTHOR

...view details