தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நீரில் மூழ்கி உயிரிழந்த 2 சிறுவர்களது குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி - முதலமைச்சர் அறிவிப்பு! - சேலம் மேட்டூர் சிறுவர்கள் பலி

சேலம் மாவட்டத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலா 2 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : May 30, 2023, 11:06 PM IST

சேலம்மாவட்டம் முனியப்பன் கோயில் காட்டுவளவு, விருத்தாசம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சுபாஷ் இவரது மகன் பரணிதரன் (15). இந்த சிறுவனும் கரட்டுப்பட்டி நங்கவள்ளி கிராமத்தைச் சேர்ந்த தங்கரசு என்பவரது மகன் கிரித்திஷ் (8) ஆகிய இரண்டு சிறுவர்களும் இன்று (மே 30) முனியப்பன் கோயில் காட்டூர் ஏரியில் குளிக்கச் சென்றனர்.

அப்போது, இருவரும் எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இது குறித்து தகவலறிந்த தீயணைப்புத் துறை வீரர்கள் மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். தொடர்ந்து, சிறுவர்களின் சடலங்களை மீட்ட காவல் துறையினர் உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இச்சம்வம் குறித்து அறிந்த முதலமைச்சர் ஸ்டாலின், உயிரிழந்த சிறுவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார். இது குறித்து ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், “சேலம் மாவட்டம் முனியப்பன் கோயில் காட்டுவளவு, விருத்தாசம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பரணிதரன் மற்றும் கிரித்திஷ் ஆகிய சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர்களுக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்” என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:"நட்புக்கும் கற்பு உண்டு" - புற்றுநோயால் இறந்த நண்பருடன் உடன்கட்டை ஏறிய இளைஞர்!

ABOUT THE AUTHOR

...view details